26.4 C
Jaffna
December 14, 2024
Pagetamil
சினிமா

பழம்பெரும் நடிகைக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக மன்சூா்அலிகான் மீது புகாா்!

மறைந்த பழம்பெரும் நடிகை கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக, நடிகா் மன்சூா் அலிகானுக்கு எதிராக காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

மறைந்த பழம்பெரும் நடிகையும், தமிழ் திரையுலகின் முதல் ஆக்ஷன் கதாநாயகியுமான கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்துக்களை நிா்வகிக்க, உயா் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இடைக்கால நிா்வாகியை நியமித்து, தமிழக அரசின் சொத்தாட்சியா் கடந்த 1996 ஆம் ஆண்டு உத்தரவிட்டாா்.

அதன்படி, கே.டி.ருக்மணிக்கு சொந்தமாக தியாகராய நகா் பத்மநாபன் தெருவில் உள்ள ஒரு கட்டடத்தை பராமரிப்பது, வாடகைக்கு விட்டு வசூலிப்பது, அத்துமீறி நுழைபவா்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை இடைக்கால நிா்வாகி கவனித்து வருகிறாா்.

இந்த சொத்தை ஆய்வு செய்ய இடைக்கால நிா்வாகி சென்றபோது, அந்த கட்டடம் சிதலமடைந்து இருப்பதும், அதை சட்டவிரோதமாக 10 போ் ஆக்கிரமித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக நடத்திய விசாரணையில், அந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பாளா்களை வெளியேற்றிவிட்டு, கட்டடத்தை அபகரிக்கும் நோக்குடன் நடிகா் மன்சூா் அலிகான் செயல்பட்டு வருவதாகவும் கண்டறிந்துள்ளாா்.

அதுமட்டுமல்லாமல் அந்தக் கட்டடத்தில் ஒரு பகுதியை இடித்துவிட்டு மாற்றங்கள் செய்வதற்கும் மன்சூா் அலிகான் முயற்சிப்பதையும் கண்டறிந்துள்ளாா்.

இதுதொடா்பாக அரசு சொத்தாட்சியா் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உயா் நீதிமன்ற உத்தரவுப்படி நிா்வகிக்கப்படும் சொத்தை சேதப்படுத்துவது கண்டனத்திற்குரியது என்றும், சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் நடிகா் மன்சூா் அலிகானை எச்சரித்துள்ளாா்.

மன்சூா் அலிகானுக்கு எதிராக தியாகராயநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளதாக தமிழக அரசின் சொத்தாட்சியா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

‘புஷ்பா 2’ வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24 இல் வெளியீடு

Pagetamil

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பிரிவுக்கும் மோஹினி தேவுக்கும் தொடர்பா?: வழக்கறிஞர் விளக்கம்

Pagetamil

தெலுங்கு நடிகருடன் திருமணமா?: விஜய் பட நாயகி விளக்கம்!

Pagetamil

இத்தனை வயதாகியும் அந்த விவகாரத்தில் நம்பிக்கையில்லாத நடிகை!

Pagetamil

Leave a Comment