26.3 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையின் ஒமைக்ரோன் தரவுகள் சர்வதேச தரவுத்தளத்தில் இணைக்கப்படாதது ஏன்?

கடந்த வாரம் மூன்று நபர்கள் கொரோனா வைரஸின் ஒமைக்ரோன் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வெளிப்படுத்திய போதிலும், சர்வதேச தரவுத்தளங்களில் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று சுகாதார நிபுணர்கள் சங்கம் கூறுகிறது.

இந்த விவகாரத்தில் சுகாதார அமைச்சகம் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என, சுகாதார வல்லுனர்களின் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

ஆய்வகத்தின் தரத்தை அங்கீகரிக்காமையால் இது ஏற்படலாம், சங்கம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது என்றார்.

நீண்ட கால அங்கீகாரம் பெற்றுள்ள ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்துடன் சோதனை நடத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று குமுதேஷ் கூறினார்.

தனிப்பட்ட தகராறுகளின் அடிப்படையில் சுகாதார அமைச்சு முடிவுகளை எடுப்பது பல கவலைகளை எழுப்பியுள்ளது என்றும் அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன் கைது

east tamil

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

east tamil

கிணற்றில் விழுந்து பச்சிளம் குழந்தை பலி

east tamil

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிகிறது

Pagetamil

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

Leave a Comment