25.5 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இலங்கை

பூநகரியில் கொல்லப்பட்ட யாழ் இளைஞன்: பெண் உள்ளிட்ட 4 பேர் கைது!

கிளிநொச்சி – பூநகரி, கௌதாரிமுனை பகுதியில், சுற்றுலா சென்றவர்களிற்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும், குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

நேற்று முன்தினம் (26) நடந்த மோதலில், ஆனைக்கோட்டை – சோமசுந்தரம் வீதியை சேர்ந்த ரஞ்சன் நிரோஷன் என்ற 22 வயதுடைய இளைஞன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பிலேயே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 46 வயதான பெண்,  51, 55, 40  வயதுடைய ஆண்களே கைதாகியுள்ளனர்.

அவர்கள் பயணித்த படகும்ஈ இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பூநகரி பொலிஸாரினாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கட்டைக்காடு குப்பை மேடாக மாறியதால் மக்கள் அவதி

east tamil

யாழ் பல்கலைக்குள் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்… இரவில் தொங்கும் பெண்களின் உள்ளாடைகள்- கலைப்பீடாதிபதி பதவிவிலகலுக்கு இதுதான் காரணமா?

Pagetamil

முகமாலையில் ரயில் மோதி இரண்டு மாடுகள் உயிரிழப்பு

east tamil

கோட்டை – காங்கேசன்துறை இடையே இரவு ரயில் சேவை அறிமுகம்

east tamil

ஒரே நாளில் 33 தமிழக மீனவர்கள் கைது

east tamil

Leave a Comment