26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

துறைமுகத்தில் சிக்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க டொலர் இல்லை!

டொலர் பற்றாக்குறையால் துறைமுகத்தில் சிக்கியுள்ள சுமார் 1500 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கொள்கலன்களை விடுவிக்க தற்போது டொலர்களை வழங்க முடியாது என இலங்கை மத்திய வங்கி வர்த்தக அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கொள்கலன்களின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு தேவையான தொகையை அடுத்த மாத நடுப்பகுதியில் வழங்கவுள்ளதாக மத்திய வங்கி, வர்த்தக அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 1,200 கொள்கலன்களை விடுவிக்க, இறக்குமதியாளர்களுக்கு வழங்க சுமார் 25 பில்லியன் அமெரிக்க டொலர்களை வங்கிகளுக்கு விடுவிக்குமாறு, இரண்டு வாரங்களுக்கு முன்னர் வர்த்தக அமைச்சு மத்திய வங்கிக்கு கடிதம் எழுதியிருந்தது.

இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வர்த்தக அமைச்சு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

முதலில் மத்திய வங்கி டொலர்களை விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்த போதிலும், கடந்த வியாழன் அன்று அமைச்சர் பந்துல குணவர்தன மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்து கடந்த வாரம் வரையில் டொலர்கள் விடுவிக்கப்படாதது குறித்து கேட்டறிந்தார்.

அடுத்த மாதம் செலுத்த வேண்டிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் தவணைகளை மீளச் செலுத்துவதற்கு மத்திய வங்கி முன்னுரிமை அளித்து வருவதால், கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் தற்சமயம் வெளியிடப்பட மாட்டாது எனத் தெரியவருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசு கட்சியின் முடிவுகளுக்கு ஏனையவர்கள் ஒத்துவர வேண்டுமென்பது முறையற்றது: செல்வம் எம்.பி

Pagetamil

UPDATE – சல்லி கோவில் ஆக்கிரமிப்பு

east tamil

வவுனியா குள ஆற்றுப்பகுதியில் அரச ஊழியரின் சடலம் மீட்பு

east tamil

திருமலையில் இலக்கிய நிகழ்வு – “மனதில் உறுதி வேண்டும்”

east tamil

காங்கேசன்துறை- நாகை படகுச்சேவை; மேம்பட்ட வசதிகளுடன் ஜனவரியில் ஆரம்பம்: வரிச்சலுகையுடனான விற்பனை நிலைய வசதிக்கும் ஏற்பாடு!

Pagetamil

Leave a Comment