கால்நடை தீவனத்தை இறக்குமதி செய்ய முடியாததன் காரணமாக சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சி பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கடுமையான டொலர் தட்டுப்பாடு காரணமாக கால்நடை தீவனத்தை இறக்குமதி செய்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர, கோழிப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கான ஒரே வழி உற்பத்தியை அதிகரிப்பதே. கால்நடை தீவனத்திற்கான மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் ஆனால் டொலர் தட்டுப்பாடு காரணமாக கடன் கடிதங்கள் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் மாதங்களில் உள்ளுர் தேவையை பூர்த்தி செய்வதில் தற்போது சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கால்நடைத் தீவனத்தை இறக்குமதி செய்ய கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களுக்கு அரசு சில சலுகைகளை வழங்கினால், உற்பத்தியை அதிகரிக்க முடியும், இதனால் முட்டை மற்றும் கோழிக்கறியின் விலை குறையும் என்றார்.