26.7 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

நிதி நெருக்கடி எதிரொலி: இ.போ.ச வடக்கு சாலைகளின் வைப்பு பணத்தில் கண் வைத்த தலைமையகம்; ஊழியர்கள் எதிர்ப்பு!

இலங்கை போக்குவரத்துசபையின் வடபிராந்தியத்திலுள்ள 7 சாலைகளிலும் உள்ள நிலையான வைப்பு பணத்தில் 150 மில்லியன் ரூபாவை, கடனாக தமக்கு அனுப்பி வைக்குமாறு, போக்குவரத்து சபையின் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு வடபிராந்திய முகாமையாளர், 7சாலைகளிற்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இந்த அறிவித்தலால் 7 சாலைகளின் ஊழியர்களும் சம்பள நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்தனர்.

அரசாங்கம் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியையடுத்து, கடந்த வரவு செலவு திட்டத்தில் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் ஒதுக்கீட்டில் பெரும் வெட்டு விழுந்தது.

இலங்கை வெளிவிவகார அமைச்சு 3 தூதரகங்களை மூடியது. இந்த நெருக்கடியால் இலங்கை போக்குவரத்துசபை நிர்வாகமும் திண்டாடி வருகிறது. நிதி நெருக்கடியிலிருந்த தப்பிக்க, வடக்கிலுள்ள 7 சாலைகளின் நிலையான வைப்பு பணத்திலும், தலைமையகம் கண் வைத்துள்ளது.

இ.போ.ச தலைமையகத்தினால் வடபிராந்திய முகாமையரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடிப்படையாக கொண்டு, வடபிராந்திய முகாமையாளர் 7 சாலைகளின் முகாமையாளர்களிற்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களிற்கு அரசாங்கம் ரூ.15,200 அடிப்படை சம்பளத்தை மட்டுமே வழங்குகிறது. ஊழியர்களின் சம்பளத்தின் ஏனைய தொகை, மேலதிக நேர கொடுப்பனவு என்பனவற்றை இ.போ.ச சாலைகள் ஒவ்வொன்றும் சேவையில் ஈடுபட்டு, இலாபமீட்டி, வழங்க வேண்டும். பேருந்து பராமரிப்பையும் சாலைகளே மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு சாலைகளும் மேலதிக வருமானத்தை சேமிப்பு பணமாக வைப்பிலிட்டு வைக்கிறார்கள். நாடளாவிய ரீதியில் பொலன்னறுவை – கதுறுவெல சாலையே அதிக லாபமீட்டும் சாலையாக உள்ளது. அதற்கு பின்னர், வடக்கின் சாலைகளும் லாபமீட்டி வருகின்றன. பல சாலைகள் நட்டத்தில் இயங்கி வருகின்றன. நட்டத்தில் இயங்கும் சாலைகளில் ஊழியர்களிற்கு சரியான சமயத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை.

இதனாலேயே, தனியார்துறையுடன் இணைந்த நேர அட்டவணையில் சேவையில் ஈடுபட இ.போ.ச சம்மதிப்பதில்லை. சமது சம்பளத்தை அரசு முழுமையாக வழங்கினால், சாலை நட்டத்தில் இயங்கினாலும் பரவாயில்லையென தனியார்துறையுடன் இணைந்த நேர அட்டவணைப்படி சேவையில் ஈடுபட முடியுமென்பது இ.போ.ச தரப்பு வாதம்.

கடந்த கொரோனா நெருக்கடி சமயத்தில், வடக்கிலுள்ள சாலைகளின் ஊழியர்களிற்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டிருக்கவில்லை. வைப்பு பணங்களிலிருந்து சரியான நேரத்தில் சம்பளம் வழங்கப்பட்டது.

இப்பொழுது, வைப்பு பணத்தில் 150 மில்லியன் ரூபாவை கடனாக தமக்கு அனுப்பி வைக்குமாறு  தலைமையகம் கோரியுள்ளது. இந்த கோரிக்கையை வடபிராந்திய முகாமையாளர் ஏற்றுக்கொண்டு, யாழ்ப்பாணம், காரைநகர், பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய 7 சாலைகளின் முகாமையாளர்களிற்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

10 தவணைகளில் இந்த பணத்தை திருப்பி தருவதாக தலைமையகம் உத்தரவாதமளித்துள்ளதாக, வடபிராந்திய முகாமையாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனினும், அதற்கான கால எல்லை கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

கொரோனா நெருக்கடி, வாகன உதிரிப்பாக நெருக்கடி நீடிக்கும் நிலையில் சாலைகளில் உள்ள வைப்பு பணத்தை, தலைமையகத்திற்கு மாற்ற வேண்டாமென வடபிராந்திய இ.போ.ச தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. தமது எதிர்ப்பையும் மீறி பணத்தை வழங்க முயற்சித்தால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதியின் இந்திய பயணம்

east tamil

வெளிநாட்டில் தனியார் பல்கலையில் பட்டம் பெற்றுவிட்டு, இலங்கையில் தனியார் பல்கலையை எதிர்த்த ஜேவிபி பிரமுகர்!

Pagetamil

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் பற்றிய தகவல்!

Pagetamil

தேசிய மக்கள் சக்தியின் மற்றொரு எம்.பியின் கல்வித் தகைமையில் சர்ச்சை!

Pagetamil

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

Leave a Comment