25.3 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் அனைத்து சேவைகளிலிருந்தும் விலகுகிறார்கள்!

புகையிரத திணைக்களம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதையடுத்து தமது போராட்டத்தை தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி நள்ளிரவில் அனைத்து சேவைகளிலும் இருந்து விலக முடிவு செய்துள்ளனர்.

மக்களுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாத வகையில் தமது தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும், அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாகவே இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவிக்கையில், தற்போது பயணச்சீட்டு வழங்கவில்லை. பொதி சேவை மேற்கொள்ளவில்லை. ஆனால், தற்போது புகையிரதங்கள் இயங்கி வருகின்றன. போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் பேச்சு வார்த்தை நடத்திய போதிலும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என அவர் கூறினார்.

விடயங்களைத் தீர்ப்பதற்கு அமைச்சரும், போக்குவரத்து இராஜாங்க அமைச்சரும் ஆதரவாக இருந்தாலும், இலங்கை ரயில்வே திணைக்களத்தின் நிர்வாகம் அவ்வாறான ஆர்வத்தை காட்டவில்லை எனவும் சோமரத்ன குறிப்பிட்டார்.

தொழிற்சங்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்ததன் பின்னர், இலங்கை புகையிரத பொது முகாமையாளர் தம்மைத் தொடர்புகொண்டதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தமக்கு உறுதியான உத்தரவாதம் கிடைக்கவில்லை எனவும், எனவே சகல சேவைகளிலிருந்தும் விலகுவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

அனைத்து நிலைய பொறுப்பதிகாரிகள் அனைத்து சேவைகளிலிருந்தும் விலகுவதால், நாளை ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று அவர் கூறினார்.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன கூறுகையில், மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதில் தாம் ஆர்வம் காட்டவில்லை எனவும், புகையிரத திணைக்கள நிர்வாகம் தன்னிச்சையாக செயற்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பதவி உயர்வுகள், சமிக்ஞை அமைப்புகள் மற்றும் வேறு பல விடயங்கள் தொடர்பான கவலைகளை முன்வைத்து, நிலைய பொறுப்பதிகாரிகள் பல நாட்களுக்கு முன்னர் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடுதியில் வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

east tamil

இலங்கைக்கு இந்திய அரசின் நிதி ஒதுக்கீடு

east tamil

போதைப்பொருளை பிடிக்க புதிய தொலைபேசி இலக்கம்

east tamil

கோயிலை புனரமைப்பு செய்தவர் தூண் விழுந்து மரணம்

east tamil

தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி

east tamil

Leave a Comment