25.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
உலகம்

கனடா நிலைமையால் French Fries க்கும் தட்டுப்பாடு!

உலகில் உருளைக்கிழங்கு வறுவல் துண்டுகளுக்கும் (French Fries) கடுகுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது.

கனடாவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் இந்த நிலைமையேற்பட்டுள்ளது. கனடாவின் சில இடங்களில் வறட்சி நிலவுகிறது. மறுபக்கம், சில இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதனால், விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, உருளைக்கிழங்கு, கடுகு ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்டது.

அதன் தாக்கம் ஜப்பானிலும் தென்படுகிறது.

ஜப்பானின் McDonald’s கிளைகளில் உருளைக்கிழங்கு வறுவல் துண்டுகள் சிறிய அளவில் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.

கனடா, கடுகின் ஆகப் பெரிய உற்பத்தியாளராக உள்ள நிலையில், கடுகின் விலை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கனடாவில் தானிய உற்பத்தி குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சோளத்தின் உற்பத்தி மட்டுமே அதிகரித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து

east tamil

டிக்டொக்கால் இறந்த மகள்

east tamil

அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்படவுள்ள இலங்கையர்கள்

east tamil

‘வில்லனை அடித்து ஹீரோவாக வேண்டுமா… என்னை அழைப்பீர்!’ – அடிவாங்கி சம்பாதிக்கும் மலேசிய இளைஞர்

Pagetamil

அமெரிக்காவில் பயணிகள் விமானம் விபத்து – 60 பேர் உயிரிழப்பு

east tamil

Leave a Comment