26.7 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

‘இலங்கையுடன் போரிடுவீர்களா?’; அமெரிக்கா என்னிடம் கேட்டது: சீமான் ‘பகீர்’ தகவல்!

அமெரிக்கா சென்ற போது அங்கு என்னை தடுத்து நிறுத்தி, எதிர்காலத்தில் இலங்கையுடன் போரிடுவீர்களா என கேட்டார்கள் என தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தமிழக ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னைப்பற்றி இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியவர் டக்ளஸின் ஆள். தம்பிகள் அந்த வீடியோவை அனுப்பியிருந்தனர். பார்த்து சிரித்தேன்.

டக்ளஸிற்கு எங்கள் அண்ணையை பிடிக்காது. அதனால் என்னையும் பிடிக்கவில்லை. இலங்கை நாடாளுமன்றத்திற்குள்ளும் என்னைப் பற்றி பேசுகிறார்கள் என எங்கள் பிள்ளைகளிற்கெல்லாம் மிக மகிழ்ச்சி.

ஒருமுறை இந்திய பாராளுமன்றத்திற்குள்ளும் என்னைப் பற்றி பேசியிருந்தார். சரி, நாங்கள் வந்து பேசும் வரை பேசட்டும்.

என் மீதுள்ள ஆற்றாமையினால் அப்படி பேசுகிறார். உலகத்தமிழ் மக்கள் என் மீது அன்பு வைத்துள்ளார்கள், என் பின்னால் திரள்கிறார்கள் என்பதில் எல்லோருக்கும் ஆற்றாமையுள்ளது.

இது நானா நிகழ்த்தவில்லை. காலம் நிகழ்த்துகிறது. இதற்கு நான் நிறைய விலை கொடுத்துள்ளேன். கடைசிநேரத்தில் சூசை அண்ணை மரண வாக்குமூலமாக, ‘சீமானிடம் சொல்லு, தொடர்ச்சியாக முன்னெடுக்க சொல்லு, அவரிடம்தான் விட்டுவிட்டு போகிறோம் என சொல்லு’ என்ற 3 வார்த்தைதான் எனக்கு சர்வதேச அளவில் இவ்வளவு பெரிய நெருக்கடி, இந்திய அளவில் நெருக்கடி, கடவுச்சீட்டு முடக்கம் எல்லாம். எந்த நாட்டுக்குள்ளும் நான் நுழைய முடியாது. சீமானை வைத்துத்தான் விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் செய்கிறார்கள் என்றுதான் இலங்கை, இந்திய உளவுத்துறை அறிக்கைகள் கூறுகின்றன.

அமெரிக்கா சென்ற போது, விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டேன். அமெரிக்காவில் இருக்கும்படியும், குடியுரிமை வாங்கித் தருவதாகவும் சொன்னார்கள். இந்தியாவில் எப்படி உயிரோடு வைத்திருக்கிறார்கள் என்றும் ஆச்சரியமாக கேட்டார்கள்.

எதிர்காலத்தில் சிறிலங்காவுடன் சண்டையிடுவேனா என்றும் கேட்டார்கள். நான் சிறிலங்காவுடன் சண்டையிடுவதற்கும், அமெரிக்காவில் என்னை கைது பண்ணி திருப்பியனுப்புவதற்கும் தொடர்புண்டா?, காமடி பண்ணாதீர்கள் என்றேன்.

பிரியங்கா காந்தி சிறைக்கு வந்து நளினியை சந்தித்தார். நளினி இருந்த செல்லுக்கு நேரடியாக பிரியங்காவை அனுப்பினார் கருணாநிதி. நளினியுடன் பிரியங்கா பேசிய பின்னர், சரத் பொன்சேகாவை கூப்பிட்டு, ‘என் கணவர் இறந்த நாளில் பிரபாகரனின் உயிர் எனக்கு பரிசாக வேண்டும்’ என சோனியா சொன்னார்.

இதுதான் ஒப்பந்தம். இதை தலைவர் எனக்கு சொன்னார் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெளிநாட்டில் தனியார் பல்கலையில் பட்டம் பெற்றுவிட்டு, இலங்கையில் தனியார் பல்கலையை எதிர்த்த ஜேவிபி பிரமுகர்!

Pagetamil

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் பற்றிய தகவல்!

Pagetamil

தேசிய மக்கள் சக்தியின் மற்றொரு எம்.பியின் கல்வித் தகைமையில் சர்ச்சை!

Pagetamil

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

Leave a Comment