24.9 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

வைத்தியர்களின் போராட்டத்தால் கடுப்பான நோயாளி!

வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு ஆதரவாக பணிப்பகிஸ்கரிப்பு இடம்பெற்று வரும் நிலையில் சிகிச்சைக்கு வந்த நோயாளரி ஒருவர் இதற்கு எதிராக கொந்தளித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் நேற்று (23) இடம்பெற்றது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் கடந்த (21) தொடக்கம் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிபகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு ஆதரவாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் பணிப்பகிஸ்கரிப்பு இடம்பெற்றது.

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் இடமாற்றச் சபையின் அனுமதியின்றி சுகாதார அமைச்சின் தன்னிச்சையான முடிவின் கீழ் மருத்துவப் பணிகளுக்கு புதிதாக மருத்துவர்களை பிழையான விதத்தில் நியமித்தமைக்கு எதிராக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறித்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அதற்கு ஆதரவு வழங்கப்பட்டதுடன் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் சேவைகள் என்பன செயலிழந்து காணப்படுவதுடன் அவசர சேவைகள் என்பன இயங்கி வருகின்றன.

வைத்தியர்களின் நீண்டகால கோரிக்கை குறித்து சுகாதார அமைச்சு மெத்தனமாக செயற்பட்டதால் போராட்டம் தொடர்கிறது.

இந்த நிலையில், சிகிச்சைக்காக கடந்த 2 தினங்களாக வைத்தியசாலைக்கு வந்திருந்த நோயாளி ஒருவர் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக ஏமாற்றுத்துடன் வீடு திரும்பியதுடன் மீண்டும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வந்துள்ளார். வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பு தொடர்வதனையடுத்து ஆத்திரமடைந்த குறித்த நோயாளி வைத்தியசாலை வளாகத்தில் கொந்தளித்தார்.

குறித்த நோயாளி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கிளினிக் சேவைகளுக்கு வருபவர்களுக்கு கூட மறு திகதியிட்டு வழங்குவதில்லை. இதனால் நோயாளிகள் பல சிரமத்தின் மத்தியில் முச்சக்கரவண்டி மற்றும் பேரூந்துகளில் பிரயாணம் மேற்கொண்டு அசௌகரியங்களுக்கு உள்ளாகுகின்றனர். இவ்விடயம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரை சந்தித்த போதிலும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவுற்றதன் பின்னரே மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க முடியுமென தெரிவித்தார்.

இன்றுடன் மூன்று தினங்கள் ஆகின்றன. இதற்கு ஓர் முடிவு வரும் என எதிர்பார்தோம். ஆனால் இன்றும் முடிவில்லை. நாங்கள் பணிப்புறக்கணிப்பு மேற்கொண்டுள்ளோம். போராட்டம் முடியும் வரை நோயாளர்கள் வர வேண்டாம் என தெரிவிக்கின்றார்களா? இல்லை நோயாளர்களை அலட்சியப்படுகின்றனர். இதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் பல்பொருள் அங்காடிகளில் திருடும் பெண்கள் குழு: சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

யாழில் 85 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

Pagetamil

நாமல் சட்டத்தரணியானது எப்படி?: விசாரணை நடத்தக்கோரி சிஐடியில் புகார்!

Pagetamil

கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – குகதாசன் எம்.பி சந்திப்பு

east tamil

நாளை புதிய சபா நாயகர் தெரிவு

east tamil

Leave a Comment