முல்லைத்தீவு மாவட்டத்தின், மூங்கிலாறு வடக்கில் கருக்கலைப்பின் போது உயிரிழந்த 12 வயது சிறுமி நிதர்சனாவின் பெற்றோர், சகோதரி கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த இவர்கள், இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 15ஆம் திகதி காணாமல் போனதாக தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், 18ஆம் திகதி சிறுமி நிதர்சனா சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது பிரேத பரிசோதனையில், 2 மாத கர்ப்பமாக இருந்தமை உறுதியானது.
சிறுமி நிதர்சனாவின் 20 வயதான மூத்த சகோதரியை 3வது தாரமாக திருமணம் செய்திருந்த 34 வயதான அத்தானே, நிதர்சனாவை துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் கைதாகினார்.
தாய், தந்தை, மூத்த சகோதரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
அத்தானால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கர்ப்பமான நிதர்சனாவிற்கு, தாயாரே கருக்கலைப்பு செய்ய முயன்றார், சிறுமியை மயக்கமடைய வைக்க ஒரு வகை மருந்தை பாவித்தார் என தந்தை ஒப்புதல் வாக்குமூலமளித்திருந்தார்.
இந்த நிலையில், தாய், தந்தை, சகோதரி இன்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள்.