29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

மஹிந்த தம்பதி திருப்பதியில் தரிசனம்!

இந்தியா சென்றுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் குடும்பத்தினர் இன்று (24) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

நேற்று சென்ற பிரதமர் மகிந்த ராஜபக்ச திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.

அதனையடுத்து, இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் நுழைவாயிலில் தேவஸ்தான செயல் அலுவலர் ஜபகர் ரெட்டி, அர்ச்சகர்கள் மரியாதையுடன் மகிந்த ராஜபக்சவை கோவிலுக்குள் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்து வைத்தனர்.

சுவாமி தரிசனத்திற்கு பிறகு மகிந்த ராஜபக்ச தங்க கொடி மரத்தை தொட்டு வணங்கி தரிசனம் செய்தார். இதையடுத்து ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் செய்து வைக்க தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்களை வழங்கினர்.

மேலும் அடுத்த வருடத்திற்கான டைரி, காலண்டர் வழங்கப்பட்டுள்ளது.

இன்று (24) மாலை வரை திருமலையில் தங்கும் அவர் ஐந்து மணிக்கு மேல் புறப்பட்டு இலங்கை வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.கிஷாந்தன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment