பயணச்சீட்டின்றி இலவசமாக பயணிக்கும் மக்கள்

Date:

தொடரூந்து திணைக்கள நிர்வாகத்தின் தன்னிச்சையான செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா புகையிரத நிலைய ஊழியர்களும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடரூந்து பயணச் சீட்டு வழங்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளதுடன், பொதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகளில் இருந்தும் விலகியுள்ளனர். எனினும் முற்பதிவு ஆசனங்களுக்காக பயணச்சீட்டு மாத்திரம் வழங்கப்பட்டு வருகின்றன.

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பயணிகள் பயணச்சீட்டையின்றி புகையிரத்தில் பயணம் மேற்கொண்டு வருவதுடன் பொதிகளையும் கையில் எடுத்து செல்கின்றனர். பயணச்சீட்டை கோரிய போதிலும் முற்பதிவு ஆசனங்களை தவிர ஏனைய ஆசனங்களுக்கு பயணச்சீட்டை தர புகையிரத நிலைய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். அதன் காரணமாக நாம் பயணச்சீட்டையின்றி புகையிரத்தில் பயணிக்கவுள்ளோம். பயணச்சீட்டையின்றி எம்மை பயணிக்குமாறு அவர்களே தெரிவித்தனர். எனவே பயணச்சீட்டையின்றி பயணிப்பது தொடர்பில் தண்டம் விதிக்கும் பட்சத்தில் அவர்களே முழுமையான பொறுப்பு கூறல் என பயணிகள் தெரிவித்தனர்.

அத்துடன், புகையிரத நிலையத்திலுள்ள ஒலிவாங்கிகள் மூலம் புகையிரதம் செல்லும் இடங்கள் தொடர்பில் தகவல் வழங்கும் செயற்பாடும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ப்ரைட் ரைஸ் வாங்கி வந்து மனைவியின் கதையை முடித்த கணவன்

ரக்வான பகுதியில், குடிபோதையில் வீடு திரும்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்...

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள்...

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

பத்தேகமவின் ஹல்பேதோட்ட பகுதியில் நேற்று (27) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்