நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
நடிகர் வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதால், சுராஜ் இயக்கத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமானார். இதனைத் தொடர்ந்து லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிகிறார். இப்படத்தின் முக்கியக் காட்சிகளின் படப்பிடிப்புக்காக, ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன்னர் லண்டன் சென்று சென்னை திரும்பியுள்ளது.
இந்த நிலையில், லண்டனிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் வடிவேலு சென்னை – போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.