Pagetamil
உலகம்

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு பொதுமன்னிப்பு!

தென்கொரியாவில் ஊழல் குற்றங்களுக்காகத் தற்போது சிறையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி பார்க் கிவென்-ஹுய்க்கு, தற்போதைய ஜனாதிபதி மூன் ஜே இன் பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறார்.

இந்த மாதம் 31ஆம் திகதி பார்க் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார்.

ஊழல் குற்றங்களுக்காக அவருக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தேசிய ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மூன் அந்தச் சிறப்புப் பொது மன்னிப்பை வழங்கியதாக அதிகாரிகள் கூறினர்.

தென்கொரியாவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் பொறுப்பிலிருந்து இறக்கப்பட்ட முதல் ஜனாதிபதி பார்க் ஆவார்.

பெரிய நிறுவனக் குழுமங்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக பெற, உதவியாளர் ஒருவருடன் கூட்டாகச் செயல்பட்டதற்காக பார்கிற்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

தமது குடும்பத்துக்கும், தமக்குச் சொந்தமான பல அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் உதவ, அவர் அவ்வாறு செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையும் படியுங்கள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகுவதாக ஹங்கேரி அறிவிப்பு!

Pagetamil

ட்ரம்பின் “விடுதலை தின” வரிகள் அறிவிப்பு: சுண்டங்காய் சைஸ் இலங்கைக்கு இவ்வளவு பெரிய வரியா?

Pagetamil

கழிப்பறையில் வாழும் சீன யுவதி

Pagetamil

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000ஐ கடந்தது!

Pagetamil

ட்ரம்ப்- புடின் தொலைபேசி உரையாடல்: 30 நாள் எரிசக்தி கட்டமைப்புக்கள் மீதான தாக்குதல் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!