பீகாரில் ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமியை 13 விநாடிகளில் 8 முறை கத்தியால் குத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி தனது இரண்டு நண்பர்களுடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டாளிகளுடன் மறைவாக இருந்த மர்மநபர், திடீரென அவரை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். 8 ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமியை 13 வினாடிகளில் 8 முறை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள், சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது.
இதனையடுத்து அந்த சிறுமி கோபால்கஞ்சில் உள்ள சதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
गोपालगंज: छेड़खानी का विरोध करने पर आठवीं की स्कूली छात्रा को असरफ अली पुत्र गुड्डा ने दिन-दहाड़े चाकुओं से छलनी किया, 13 सेकेंड में 8 बार चाकू से वार किया, गिरफ़्तार pic.twitter.com/k0pyxA2tDx
— Newsroom Post (@NewsroomPostCom) December 21, 2021
இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.