ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஜே.வி.பியும் கூட்டணி அமைக்க முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஜயசேகர, அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டுள்ளது.
ஜே.வி.பி போன்ற ஊழலற்ற கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற சுத்தமான கட்சியுடன் கூட்டணி அமைக்க முடியும் என்றார்.
இவ்வாறான கூட்டணி எதிர்காலத்தில் நாட்டின் நலனுக்காக செயற்படும் என இராஜாங்க அமைச்சர் கூறினார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1