குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் செயற்படும் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு பொதுமக்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்காக 1917 என்ற தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கும் நபர்கள் தொடர்பான தகவல்களை இந்த இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் வழங்க முடியும் எனவும் இந்த இலக்கம் 24 மணி நேரமும் செயற்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த தொலைபேசி இலக்கத்தில் தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக தீங்கிழைக்கும் மற்றும் தனிப்பட்ட பகையை அடிப்படையாகக் கொண்டு போலித் தகவல் வழங்கியதன் அடிப்படைில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1