பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதால் ஆத்திரமடைந்த மனைவி கணவனை போலீசில் பிடித்து கொடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண் ஜோஷி. மெக்கானிக்கல் பட்டதாரியான அருண் ஜோஷி பஹ்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரியான இளம்பெண்னுக்கும், அருண் ஜோஷிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் காதல் திருமணம் நடந்தது.
இதனை தொடர்ந்து அருண் ஜோஷி கடந்த மே மாதம் பஹ்ரைன் நாட்டுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அந்த வேளையில் அவரது மனைவி வீட்டில் இருந்த கணினியை பயன்படுத்தியுள்ளார். அப்போது அவருக்கு தனது கணவர் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
கணினி முழுவதும் பெண்களின் ஆபாசப் படங்களும், பல பெண்களிடம் ஆபாசமாக உரையாடிய வீடியோக்களும் இருந்ததைப் பார்த்த மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார். கணவன் வெளிநாட்டிலிருந்து இளம் பெண்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததும் மனைவிக்கு தெரியவந்தது.
இதனையடுத்து, தவறு செய்தது தன்னுடைய கணவர் என்றாலும் இப்படிப்பட்ட நபரை கண்டிப்பாக போலீசில் பிடித்து கொடுக்க வேண்டும் என்று அந்த இளம்பெண் முடிவு செய்தார். கணவனை போலீஸாரிடம் பிடித்துக் கொடுக்க திட்டம் போட்ட மனைவி இதற்காகவே இன்ஸ்டாகிராமில் வேறு ஒரு பெண் பெயரில் போலியாக ஒரு பக்கம் துவங்கி அதிலிருந்து அவர் கணவருக்கு REQUEST அனுப்பியுள்ளார்.
யாரோ தனக்கு REQUEST கொடுத்திருப்பதாக நினைத்து உடனே ஏற்றுக் கொண்ட அருண் ஜோஷி, இளம் பெண் ஒருவர்தான் தன்னிடம் பேசுகிறார் என நினைத்து தனது மனைவியிடமே ஆபாசமாக பேசி வந்துள்ளார்.
இது தொடரவே ஒரு கட்டத்தில் அவர், ” நீ பாலியல் தொழிலில் ஈடுபட்டால் விரைவில் பணக்காரர் ஆகிவிடலாம்” என்று ஆசை வார்த்தைகள் கூறியதுடன் சில பெண்களின் படங்களையும் அனுப்பி உள்ளார்.
அப்போது அந்த பெண் கணவரிடம் ‘நான் அடையாறு பகுதியில் உள்ள பிரபல தொழிலதிபர் மகள், உங்களை காதலிக்கிறேன். உங்களை சந்திக்க வேண்டும் என ஆசையாக உள்ளது” என்று கூறியுள்ளார். இந்த வார்த்தையால் சொக்கி போன அருண் ஜோஷி உடனடியாக சென்னை வருவதாக கூறியதால், அந்த இளம்பெண்ணே கணவருக்கு டிக்கெட் புக் செய்து கொடுத்துள்ளார்.
ஆசை மோகத்தால் பஹ்ரைன் நாட்டில் இருந்து உடனடியாக சென்னைக்கு பறந்து வந்த அருண் ஜோஷி சென்னை திருவான்மியூரில் உள்ள சொகுசு விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு போய் பார்த்தற்கு பிறகு தான் இத்தனை நாள் நம்முடன் பேசியது வேறு யாரோ இல்லை தன் மனைவி தான் என்று அவருக்கு பெரிய அதிர்ச்சி இருந்தது. விடுதியில் மனைவி இருந்ததை பார்த்த அருண் ஜோஷி தன்னை பிடிக்க மனைவி செய்த திட்டமிட்ட நாடகம்தான் இதெல்லாம் என்பது அவருக்கு தெரியவந்தது.
அருண் ஜோஷியின் மனைவி இதுபற்றி ஏற்கனவே போலீசாருக்கு தகவல் தெரிவித்திருந்ததால், அங்கு மறைந்திருந்த போலீஸார் அருண் ஜோஷியை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். தன் கண்வன் என்றும் பாராமல் தண்டிக்க நினைத்த மனைவி தந்திரமாக திட்டமிட்டு அந்த கொடூரனை போலீசில் சிக்கி வைத்தாள். அருண் ஜோஷி இதுபோல் வேறு எந்த இளம்பெண்களையெல்லாம் ஏமாற்றி வந்துள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.