தமிழ் மொழி பேசும் கட்சிகளிற்கிடையிலான கலந்துரையாடலில் தயாரிக்கப்பட்ட வரைபு இன்று அதிகாலை அனைத்து கட்சிகளின் தலைவர்களிற்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இனப்பிரச்சனைக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலிறுத்தியும், அதற்கிடையில் – இடைக்கால ஏற்பாடாக – உடனடியாக -13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்தவும், 1987ஆம் ஆண்டு இலங்கை – இந்தியா உடன்படிக்கையில் தமிழர் தரப்பில் சார்பில் கையெழுத்திட்ட இந்தியா தனது பொறுப்பை நிறைவேற்றவும் வலியுறுத்தும் இந்த ஆவணம், நேற்று இறுதி செய்யப்பட்டது.
இதன் கையெழுத்து வடிவம் நேற்று மாலை 5.30 மணிக்கு தயாரான போதும், உடனடியாக தட்டச்சு வடிவமாக்க நேரம் போதாததால், தலைவர்கள் கையெழுத்திடவில்லை.
அந்த ஆவணம் முழுமையான வடிவமாக்கப்பட்டு, இன்று காலை முதல் கட்சி தலைவர்களிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1