26 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

விலை போவார்களா தமிழ் தேசிய கட்சிகளின் உறுப்பினர்கள்?: வவுனியா வடக்கில் இன்று தெரிய வரும்!

வவுனியா வடக்கு பிரதேச சபையைக் கைப்பற்றுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் இணைந்து கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

வவுனியா வடக்கு பிரதேச சபையானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருந்தது. இருப்பினும் இம்முறை வரவு செலவுத் திட்டம் தவிசாளர் எஸ்.தணிகாசலம் அவர்களால் கடந்த மாதம் 19 ஆம் திகதி சபையில் முன்வைக்கப்பட்ட நிலையில் வாக்கெடுப்பின் போது 7 பேர் ஆதரவாகவும், 15 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர். ஒருவர் நடு நிலை வகித்ததுடன், மூவர் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை. இதனால் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தது.

வரவு செலவுத் திட்டம் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு இம் மாதம் 7 ஆம் திகதி இரண்டாவது தடவையாக சபைக்கு முன்வைக்கப்பட்ட போது 17 பேர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகவும், 8 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர். இதனால் 9 மேலதிக வாக்குளால் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தது.

வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்து 15 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று (22) காலை 10.30 இற்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ளது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன தவிசாளர்களை நிறுத்தவுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில், பொதுஜன பெரமுனவின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்மதான் மற்றும் அவரது நெருங்கிய சகாக்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனும் கூட்டாக ஆட்சியைக் கைப்பற்றுவது தொடர்பில் வவுனியா வடக்கில் பல்வேறு தரப்புக்களுடனும், சபை உறுப்பினர்களுடனும் பேசி வருவதாக தெரியவருகிறது.

மறுபுறம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கக் கோரி சபை உறுப்பினர்களுடன் பேசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 08 உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னனி 03 உறுப்பினர்களும், ஈபிஆர்எல்எப் 03 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திர கட்சி 02 உறுப்பினர்களும், பொதுஜன பெரமுன 05 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சி 03 உறுப்பினர்களும், ஜேவிபி 01 உறுப்பினரும் மற்றும் சுயேட்சைக் குழு 01 உறுப்பினரும் உள்ளடங்களாக 26 உறுப்பினர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியம் பேசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈபிஆர்எல்எப் தரப்பின் 14 உறுப்பினர்கள் சபையில் இருக்கின்ற நிலையில், தென்னிலங்கை கட்சி ஆட்சியமைக்க, இந்த தரப்புக்களே இன்று விலை போவார்களா என்பது தெரிய வரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுநிலை: வடக்கு, கிழக்கில் எங்கெல்லாம் மழை பொழிய வாய்ப்பு?

Pagetamil

அடுத்த 24 மணித்தியாலத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது!

Pagetamil

‘எமது காணியை மோசடி செய்து விட்டார்கள்’: கிளிநொச்சி நபர் பரபரப்பு புகார்

Pagetamil

கொழும்பு குற்றப்பிரிவு பொலிசாரின் சட்டவிரோத துப்பாக்கிச்சூடு… ரணில் வழங்கிய பணப்பரிசில்: சிஐடி புதிய விசாரணை!

Pagetamil

தமிழ் அரசு கட்சியின் முடிவுகளுக்கு ஏனையவர்கள் ஒத்துவர வேண்டுமென்பது முறையற்றது: செல்வம் எம்.பி

Pagetamil

Leave a Comment