24.8 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் மர்மமாக உயிரிழந்த பெண்: நீதிபதியின் உத்தரவு!

கிளிநொச்சி ஜெயந்திநகரில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்க கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் பணித்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற பகுதியை பார்வையிட்ட நீதவான் சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி உதவி் பொலிஸ் அத்தியட்சகரை பணித்துள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த 32 வயதான குடும்ப பெண்ணான நிலகரட்ண ஜெயசீலி என்பவரின் சடலத்தை அவரது தாயாரிடம் கையளிக்குமாறு நீதவான் பணித்துள்ளார். ஆயினும் மரணம் தொடர்பில் ஏற்படுகின்ற சந்தேகங்களிற்கு உதவியாக குறித்த சடலத்தை புதைக்குமாறும் உறவினர்களிற்கு பணித்துள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் கடந்த (19) சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி சிங்கராசா ஜீவநாயகம் விசாரணை மேற்கொண்டிருந்தார். தொடர்ந்து குறித்த சடலம் பிசிஆர. பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட இன்று பிரேத பரிசோதனை இடம்பெற்றிருந்தது.

விசாரணைகளில் சந்தேகம் எழுந்திருந்த நிலையில் நேற்றைய தினம் (20) மாலை சட்ட வைத்திய அதிகாரி ஆர்.தனுசன் சம்பவம் இடம்பெற்ற இடத்தை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

குறித்த சம்பவம் கடந்த (18) இரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்தது.. வாடகை வீட்டில் வசித்து வந்த சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தரான 32 வயதுடைய என்ற 03 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி விநாயகபுரம் இயக்கச்சி பகுதியை சேர்ந்த இவர் தொழிலின் நிமித்தம் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இவரது கணவர் பிரிந்துள்ள நிலையில் 3 பிள்ளைகளுடன் தனித்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது மூத்த பிள்ளைகள் இரண்டும் தாயாருடன் பணிபுரியும் பெண்ணின் வீட்டில் வழமையாக தங்குவர்.

சம்பவம் இடம்பெற்ற இரவும் வழமைபோல இரண்டு பிள்ளைகளும் சென்றுள்ளனர். அதே வேளை கடைசி பிள்ளை தாயாருடன் வழமைபோல நின்றுள்ளது.

இந்த நிலையில் ஆரம்பகட்ட விசாரணைகளில் பெண்ணின் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்திருந்தது. இந்த நிலயைில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு மன்று கட்டளையிட்டிருந்தது.

இந்த நிலையில், மரண விசாரணைகளின் போது எழுந்துள்ள சந்தேகத்தை அடுத்து சட்ட வைத்திய அதிகாரி சம்பவ சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டிருந்தார்.

இந்த நிலயைல் இன்று (21) பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் சம்பவம் இடம்பெற்ற இடத்தை பார்வையிட்டிருந்ததுடன், சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறும், முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குறிப்பிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் குறித்த பெண்ணின் சடலம் அவரது தாயாரிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், இறுதி கிரியைகள் கெக்கிராவவில் அவர்களது பூர்வீக இடத்தில் இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒராங்குட்டான் உயிரிழப்பு

east tamil

வெளிநாடு செல்லும் கனவுக்காக போதைப்பொருள் விற்ற மாணவன் கைது

east tamil

வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் தனியார் பேருந்து சங்கங்கள்!

Pagetamil

இலங்கையில் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

east tamil

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

Leave a Comment