நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அரசாங்கம் அதிகரித்துள்ளது.
புதிய விலைகள் இன்று டிசம்பர் 21 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த அறிவிப்பை தொடர்ந்து லங்கா இந்தியன் ஓயில் நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 177 ரூபாவாகவும், 95 ஒக்டேன் லீற்றர் 23 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 210 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், ஒரு லீற்றர் ஓட்டோ டீசல் 7 ரூபாவினால் அதிகரித்து 121 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 15 ரூபாவினால் அதிகரித்து 159 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
லிட்டருக்கு புதிய விலை:
92 ஒக்டேன் ரூ.177
95 ஓக்டேன் ரூ.210
ஓட்டோ டீசல் ரூ.121
சூப்பர் டீசல் ரூ.159
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1