பிலிப்பைன்ஸில் ராய் புயல் தாக்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஐ நெருங்கி வருகிறது. இதுவரை சுமார் 380 மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் “சிதைந்து அழிந்துள்ளதால்” செஞ்சிலுவைச் சங்கத்தால் ஆபத்தான நிலைமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
🟠FILIPINAS, TUFÃO RAI | PARTE 1/2 | Até o momento, 375 pessoas morreram, 500 ficaram feridas e 56 ainda estão desaparecidas na passagem do #tufaoRai pelas #Filipinas, na última quinta-feira (17).#Typhoon #Rai #Philippines #TyphoonOdette #TyphoonRai #Siargao #tufao #tufaoOdette pic.twitter.com/QDAAEp5ZyK
— Explora Digital (@exploradigital_) December 20, 2021
காலநிலை மாற்றத்தின் விளைவாக சூறாவளி அதிக சக்தி வாய்ந்ததாக மாறி வருவதாக விஞ்ஞானிகள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர். பருவநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் பிலிப்பைன்ஸ் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 புயல்களால் இது தாக்கப்படுகிறது.
இவ்வளவு இறப்புகளை தான் எதிர்பார்க்கவில்லை என்று பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
The central and southern parts of the Philippines have been devastated by Typhoon Rai https://t.co/voKuyZy7Q8 pic.twitter.com/q98udV4e5s
— Reuters (@Reuters) December 17, 2021
பிலிப்பைன்ஸின் இந்த ஆண்டின் 15வது சூறாவளி, நாட்டின் மத்திய கிழக்கு கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் கடல் விளையாட்டு தலமாக விளங்கும் சியர்காவ் தீவில் கரையை கடந்தது. இது முதலில் மணிக்கு 260 கிலோமீட்டர் (மணிக்கு 160 மைல்) வேகத்தில் காற்று வீசியது, இது வகை 5 புயலாக மாறியது.
Dinagat மற்றும் Mindanao தீவுகளும் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.