பட்டம் விட்ட இளைஞர் ஒருவரை, சுமார் 30 அடி உயரத்துக்கு பட்டம் தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
யாழ் மாவட்டத்தின், பருத்தித்துறை, புலோலி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
நேற்று இளைஞர்கள் பலர் கூடி அந்தப் பகுதியில் பெரிய பட்டம் ஒன்றை பறக்க விட்டனர். பின்னர் அந்தப் படத்துடன் இன்னொரு பட்டத்தை தொடுத்து ஏற்ற முனைந்தனர்.
அப்போது, இரண்டாவது பட்டத்தின் ‘முச்சை’ கயிற்றை பிடித்திருந்தவரையும், தூக்கிக் கொண்டு பறந்தது.
சுமார் 30 அடி உயரம் வரை பறந்தவரை கீழிறக்க முடியாமல் இளைஞர்கள் திணறினர்.
சுமார், 5 நிமிடங்கள் பறந்த நபர் சுமார் 20 அடிவரை கீழிறங்கிய பின்னர் கையை விட கீழே விழுந்தார்.