வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி வந்துகொண்டிருந்த இளைஞரொருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த சிவபால சுந்தரம் மயூரன் (33) எனவும் தெரியவருகின்றது.
69வது தேசிய பூப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வு கொழும்பில் நடைபெற்று வருகின்ற நிலையில் இவர் நடுவராக கடமையாற்றி வந்துள்ளார்.
விசாரணைகளை கெப்பித்திக்கொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-அப்துல்சலாம் யாசீம்-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1