வவுனியா, 4ம் கட்டைப் பகுதியில் வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டு இருந்த போது காஸ் அடுப்பு வெடித்ததாக பூவரசன்குளம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, 4ம் கட்டைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென் காஸ் அடுப்பு வெடித்துள்ளது.
இதனையடுத்து வீட்டார் காஸ் சிலிண்டரை பாதுகாப்பாக மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளனர். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1