வத்தேகம, வாவின்ன பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் சட்டவிரோதமான மின்கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
49 வயதுடைய மெனிகின்ன பிரதேசத்தில் வசிக்கும் இவர் கோழிப்பண்ணையின் ஊழியராவார்.
திருட்டை தடுக்க கோழி கூண்டுகளை சுற்றிலும் மின்கம்பி அமைக்க பண்ணையின் உரிமையாளர், பண்ணை ஊழியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
மூன்று ஊழியர்கள் மற்றும் பண்ணையின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1