24.6 C
Jaffna
March 7, 2025
Pagetamil
கிழக்கு

கஞ்சாவுடன் சிக்கிய இரண்டு இராணுவத்தினர்!

திருகோணமலை- மொரவெவ பிரதேசத்தில் கஞ்சா போதைப் பொருளுடன் இரண்டு இராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இராணுவ வீரர்கள் பயணித்த முற்சக்கர வண்டியை சோதனையிட்டபோது கஞ்சா பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் பன்குளம் இராணுவ முகாமில் கடமையாற்றிய வருபவர்கள் எனவும் 25 மற்றும் 30 வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த இருவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

-பதுர்தீன் சியானா-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தூக்கில் தொங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது!

Pagetamil

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Pagetamil

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

திருக்கோணேஸ்வரர் ஆலய லிங்கேற்பவர் அபிஷேகம் மற்றும் பூஜை

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!