25.4 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இந்தியா

மனைவி அழகாக இருந்ததால் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு அலுவலகம் செல்லும் கணவன்: விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட மனைவி!

கணவன் வீட்டிலேயே பூட்டி வைத்து துன்புறுத்தியதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் வினய். சங்கீதா என்பவரை காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் மென்பொருள் துறையில் பணியாற்றிய போது 5 வருடங்களின் முன் அறிமுகமாகி, திருமணம் செய்து கொண்டவர்கள்.

திருமணத்திற்கு பிறகு மனைவி மீது சந்தேகப்பட்டு வந்துள்ளார். மனைவி அழகாக இருப்பதால் அவர் யாருடனும் பேச கூடாது என அவரிடம் கூறியுள்ளார்.

மேலும் செல்போனை சோதிப்பது நண்பர்களுடன் பேசினால் சந்தேகிப்பது போன்ற காரியங்களை அவர் செய்துவந்ததால் சங்கீதா மன உளைச்சலில் இருந்துள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் என்பதால் அவரை விட்டு விலகவும் முடியாமல் தவித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வினயின் சந்தேக புத்தி அளவுக்கு அதிகமாக சென்றுள்ளது.

அவர் சில நாட்களாக சங்கீதாவை வீட்டில் வைத்து பூட்டி விட்டு வைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனை ஒருகட்டத்தில் வெறுப்படைந்த சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள வினயை தேடி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய இராணுவ வீரர்கள் இறப்பு

east tamil

டேட்டிங் செயலியில் அமெரிக்க மாடல் என ஏமாற்றி 700 பெண்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது

Pagetamil

விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்: பரிசோதனை வெற்றி என இஸ்ரோ அறிவிப்பு

Pagetamil

‘சார்’ சர்ச்சை: அண்ணா பல்கலை. விசாரணை குறித்து ஆதாரமற்ற தகவல் – காவல் துறை விளக்கம்

Pagetamil

விண்வெளியில் வேளாண்மை செய்யும் ஆய்வில் வெற்றி!

east tamil

Leave a Comment