25.3 C
Jaffna
January 21, 2025
Pagetamil
உலகம்

படுக்கையறையிலிருந்து மேசைக்கு சென்றவர் விழுந்து விபத்து: வேலைக்கு செல்லும் போது நேர்ந்த விபத்தென காப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

வீட்டிலுள்ள படுக்கையிலிருந்து மேசைக்கு நடந்து சென்றவர் தவறி விழுந்த சம்பவம், ‘வேலைக்கு செல்லும் பயணத்தின் போதான விபத்து’ என தகுதியுடையது என ஜேர்மனி நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு தனது படுக்கையில் இருந்து தனது வீட்டு அலுவலகத்திற்கு நடந்து செல்லும் போது தவறி விழுந்த ஒரு நபர் தொடர்ந்த வழக்கில், அந்த விபத்து, பணியிட விபத்துக்கு தகுதி பெற்றதாக ஜெர்மன் ஃபெடரல் சமூக நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

அந்த நபர் தனது வீட்டு அலுவலகத்திற்குச் செல்வதற்காக சுழல் படிக்கட்டில் இறங்கும் போது அவரது முதுகு உடைந்ததாக நீதிமன்றத் தீர்ப்பு கூறியது, மேலும் அதை “பயணம்” என்ற தகுதியையும் பெற்றது.

வீட்டிலிருந்து வேலைசெய்த அந்த ஆண், தம்முடைய வீட்டு அலுவலகத்திற்குச் செல்ல மாடிப்படிகளில் இறங்கியபோது வழுக்கி விழுந்தார்.

அது ஒரு வேலையிட விபத்து என்று கூறி, தமக்கு ஏற்பட்ட காயங்களுக்கு இழப்பீட்டுத் தொகையைக் கோரினார்.

இருப்பினும் தொகையை அளிக்கக் காப்புறுதி நிறுவனம் மறுத்தது.

காப்புறுதித் திட்டத்தின்படி, வேலையிடத்திற்கு அன்றாடம் மேற்கொள்ளப்படும் முதல் பயணத்தில் விபத்து நேர்ந்தால் இழப்பீடு வழங்கப்படலாம்.

வீட்டிலிருந்து வேலை செய்தாலும் தம்முடைய அறைக்கு அதாவது வேலை இடத்துக்குச் செல்லும் வழியில் விபத்துக்குள்ளானதாக நீதிமன்றம் கூறியது.

அந்த நபர் எழுந்தவுடன் நேரடியாக வீட்டு அலுவலகத்திற்குச் சென்றபோதுதான் விபத்து நேர்ந்தது என்பதால் இழப்பீடு குறித்த அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றும் கூறப்பட்டது.

‘காலை படுக்கையில் இருந்து வீட்டு அலுவலகத்திற்குச் செல்வது ஒரு காப்பீடு செய்யப்பட்ட வேலை பாதையாகும்’ என்று நீதிமன்றம் கூறியது.

விபத்திற்குள்ளானவர் காலை உணவைச் செய்யாமல் வேலை செய்யத் தொடங்குகிறார். அவர் படுக்கையிலிருந்து எழுந்ததும்  “முதல் முறையாக வேலையைத் தொடங்க மட்டுமே நடந்தார். எனவே முதலாளியின் நலன்களுக்காக ஒரு சேவையாக காப்பீடு செய்யப்படுகிறது” என்று நீதிமன்றம் கூறியது.

கொரோனா தொற்றினால் வீட்டிலிருந்தே வேலை செய்யும் சூழல் உருவாகியுள்ள நிலையில், இந்த தீர்ப்பு பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தாய்வானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 15 பேர் காயம்

east tamil

அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக டிரம்ப் அறிவிப்பு

east tamil

ஹமாஸ்ஸினால் விடுவிக்கப்பட்ட 3 பணயக்கைதிகள் இஸ்ரேலில் இணைவு

east tamil

47வது அமெரிக்க ஜனாதிபதியாக பதியேற்கும் டொனால்ட் ட்ரம்ப்

east tamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

Leave a Comment