முதியோர் இல்லத்தில் வசித்து வந்த இருவர் அண்மையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
நாரம்மல சடலங்காவில் உள்ள வெல்கம் வில்லேஜ் என்ற இ்லத்தில் வசித்து வந்த லியோனி பெர்னாண்டோ (62) மற்றும் சிறில் குணவர்தன (79) ஆகியோர், டிசம்பர் 8 ஆம் திகதிதிருமணம் செய்து கொண்டனர்.
சிறில் குணவர்தன இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் ஊழியர் ஆவார்.
லியோனி 9 மாத குழந்தையாக இருந்த போது பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அவர் கைவினைப்பொருள்கள் தயாரிப்பதில் சிறந்து விளங்கினார் மற்றும் திறமையான பாடகியாக இருந்தார். தென் கொரியாவில் நடந்த பாடல் போட்டியிலும் கலந்து கொண்டார்.
சிரில் பல வருடங்களாக முதியோர் இல்லத்தில் லியோனியை கவனித்து வருகிறார். இதன்போது இருவருக்கும் காதல் பிறந்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த தம்பதியினர் வெல்கம் வில்லேஜ் என்ற முதியோர் இல்லத்திலேயே தொடர்ந்து வசிப்பார்கள்.