உலகம்

தைவானுடனான இராஜதந்திர உறவை துண்டித்தது நிக்கரகுவா!

மத்திய அமெரிக்க நாடான நிக்கரகுவா, தைவான் உடனான நீண்டகால ,இராஜதந்திர உறவைத் துண்டித்துக்கொண்டுள்ளது.

தற்போது சீனாவுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ள நிக்கரகுவா, அதன் விளையாக இந்த முடிவை எடுத்தது.

உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது என்பதை அங்கீகரிப்பதாக நிக்கரகுவா அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்த சீனாவையும் பிரதிநிதிக்கும் ஒரே சட்டபூர்வமான அரசாங்கம் சீனா என்றும், சீனாவிலிருந்து பிரிக்க முடியாத பகுதி தைவான் என்றும் நிக்கரகுவா குறிப்பிட்டது.

தைவானுடன் எந்த விதமான அதிகாரபூர்வ உறவும் தொடர்பும் இல்லை என்று அது நேற்று சொன்னது.

நிக்கரகுவாவின் நடவடிக்கை சரியான முடிவு என்று சீன வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

புதிய அறிவிப்பைத் தொடர்ந்து, சீனாவும் நிக்கரகுவாவும் உடனடியாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தொடங்கின.

இதற்கிடையே, நிக்கரகுவாவின் நடவடிக்கை வேதனையையும் வருத்தத்தையும் அளிப்பதாகத் தைவான் கூறியுள்ளது. இருதரப்புக்கும் இடையிலான நட்பை நிக்கரகுவா புறக்கணித்துவிட்டதாக அது குறிப்பிட்டது.

இருப்பினும் மற்ற நாடுகளுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொள்வது தொடரும் என்றும் தைவான் குறிப்பிட்டது.

நிக்கரகுவாவைத் தவிர்த்து, தற்போது 14 நாடுகளுடன் தைவான் இராஜதந்திர உறவைக் கொண்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆங் சான் சூகி வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டார்

Pagetamil

ஈரான் ஏவுகணைகளை இடைமறிப்பதில் சவுதி பங்கேற்கவில்லை!

Pagetamil

அவுஸ்திரேலியாவில் மத வழிபாட்டிடத்தில் கத்திக்குத்து!

Pagetamil

போர் பதட்டத்தை தணிக்க வலியுறுத்தும் உலக தலைவர்கள்

Pagetamil

ரஷ்ய பாணியில் பரிசோதனை தாக்குதல் நடத்திய ஈரான்!

Pagetamil

Leave a Comment