நேற்று 744 பேர் கோவிட்-19க்கு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டன்.
இவர்களில் ஒருவர், வெளிநாட்டிலிருந்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டார். ஏனையவர்கள் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 570,672 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று, 356 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 543,823 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 12,294 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல இடங்களில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், 22 பேர் மரணங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. நாட்டில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 14,555 ஆக அதிகரித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1