கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இன்று முதல் ஃபைசர் பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது.
தகுதியான அனைத்து குடிமக்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என கொழும்பு மாநகர சபையின் பிராந்திய தொற்றுநோய் நிபுணர் டொக்டர் தினுக குருகே தெரிவித்தார்.
பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் மற்றும் தேவையற்ற பொதுக் கூட்டங்களை உருவாக்க வேண்டாம் என்று குருகே கேட்டுக் கொண்டார். அனைத்து நபர்களுக்கும் போதுமான தடுப்பூசிகள் உள்ளன.
இரண்டாவது தடுப்பூசையை பெற்ற மூன்று மாதங்கள் முடிந்த நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகங்கள் ஊடாகவும் இந்த தடுப்பூசி அளவு வழங்கப்படவுள்ளதாக வைத்தியர் குருகே தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1