11 மாணவர்கள் கடத்தல் வழக்கிற்கு எதிராக கரன்னகொட மனு!

Date:

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல்  வசந்த கரன்னாகொட  மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (08) அனுமதி வழங்கியது.

மனுக்கள் மீதான ஆட்சேபனைகளை ஜனவரி 10ம் திகதி அல்லது அதற்கு முன் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த மனு நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கிற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி முன்னாள் கடற்படைத் தளபதி தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த ரிட் மனுவில் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், தொடர்புடைய குற்றப்பத்திரிகை வழக்கின் விசாரணையை நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவும் மனுதாரர் கோரியிருந்தார்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி நவாஸ் மற்றும் நீதிபதி சோபித ராஜகருணா ஆகியோரால் இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கை இடைநிறுத்தக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வசந்த கரன்னாகொட தாக்கல் செய்த ரிட் மனு விசாரணைக்கு வரும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமுலில் இருக்கும்.

மனுதாரர் சார்பில் ரொமேஷ் டி சில்வா, சட்டத்தரணி சுகத் கல்தேர ஆகியோர் ஆஜராகினர்.

மனுவை ஜனவரி 31ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்