இலங்கையில் நேற்று 748 கோவிட்-19 நோயாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 569,171 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று 423 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 543,111 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 11,555 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், திங்கட்கிழமை கோவிட்-19 தொற்று காரணங்களால் 21 பேர் மரணித்தனர். நாட்டில் இதுவரை பதிவான கோவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 14,505 ஆக அதிகரித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1