சீனாவின் பெய்ஜிங்கில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அவுஸ்திரேலியாவும் இராஜதந்திர ரீதியால புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
பெய்ஜிங் ஒலிம்பிக்கை இராஜதந்திரீதியில் புறக்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து நியூசிலாந்து துணைப் பிரதமர் கிரான்ட் ரொபர்ட்சன் அறிவித்தார். அவரது அறிவிப்பில் கொரோனா நிலவரம் காரணமாக தமது நாட்டு அரச அதிகாரிகள் ஒலிம்பிக்கிற்கு செல்லமாட்டார்கள் என்றார். தமது முடிவிற்கும், அமெரிக்காவின் முடிவிற்கும் தொடர்பில்லை என்றார்.
அதை தொடர்ந்து, இராஜதந்திர புறக்கணிப்பு அறிவிப்பை அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனும் வெளியிட்டுள்ளார்.
போட்டிகளில் அவுஸ்திரேலிய அரசாங்க அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ளப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்பர்.
அவுஸ்திரேலியாவை மிரட்டும் விதமாகச் சீனா விதித்திருக்கும் வர்த்தக நடைமுறைகளும், சீனாவில் நேர்வதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்களும் அவுஸ்திரேலியாவின் முடிவுக்கான காரணங்கள் எனப் பிரதமர் மொரிசன் கூறினார்.