பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் இலங்கையை சேர்ந்த ஆடைத் தொிற்சாலை மேலாளர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ‘இளமையின் குதூகலம்’ மற்றும் இது ‘எப்போதும் நடப்பது தான்’ என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சைலகோட் பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றிவந்தவர் பிரியந்த குமர.
தொழிற்சாலையின் வெளிச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை கடந்த வெள்ளிக்கிழமை கிழித்துள்ளார். தெக்ரிக் – இ – லெப்பை பாகிஸ்தான் அமைப்பு சார்பில் ஒட்டப்பட்டிருந்த அந்த சுவரோட்டியில் மதம் சார்ந்த வாசகங்களும் இடம்பெற்றுள்ளது. அத்துடன், சுத்திரிப்பு தொழிலாளிகளிற்கு கட்டளையிட்டும், சுவரொட்டிகளை அகற்றாததற்கு கண்டித்ததுடன், ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
சுவரோட்டியை பிரியந்தா கிழிப்பதை பார்த்து ஆத்திரமடைந்த தெக்ரிக் – இ – லெப்பை அமைப்பினர் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் தங்கள் மத உணர்வுகளை புண்டுத்தியதாக பிரியந்த குமரவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
சுவரொட்டியில் மதம் சார்ந்த விடயங்கள் எழுதப்பட்டிருந்ததை தெரிந்திராத பிரியந்த, ஊழியர்களின் எதிர்ப்பையடுத்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
சுமார் 4000 பேர் பணிபுரியும் அந்த தொழிற்சாலையில், அரைவாசிப் பேர் பிரியந்தவிற்கு எதிராக அணி திரண்டு, அவரை அடித்துக் கொன்று, எரித்தனர்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எரித்து கொல்லப்பட்ட குமாரவின் உடல் நேற்று இலங்கை சென்றடைந்தது.
இந்நிலையில், இலங்கை நபர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ‘இளமையின் குதூகலம்’ மற்றும் இது ‘எப்போதும் நடப்பது தான்’ என பாகிஸ்தான் அமைச்சர் கூறினார். இலங்கை நபர் எரித்துக்கொல்லப்பட்டது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் பர்வேஷ் ஹடக் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
இது இஸ்லாமிய இளைஞர்களின் இளமை குதூகலம். இது எல்லா நேரத்திலும் நடக்கும். இஸ்லாமிய மதம் தாக்கப்பட்டதாக இளைஞர்கள் உணர்ந்தால், அதை காக்க இளைஞர்கள் எதிர்வினையாற்றுகிறார்கள்’ என்றார்.
அத்துடன், தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் (TLP) மீதான தடையை நீக்குவதற்கான அரசாங்கத்தின் முடிவோடு கொடூரமான சம்பவத்தை இணைக்கக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து பாதுகாப்ர் அமைச்சர் வெளியிட்ட ருவிற்றர் பதிவில்,
“கொலை செய்யப்பட்ட இலங்கையர் கொடூரமாக பலிகடாவாக்கப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த சம்பவம் பாகிஸ்தானின் பிரதிபலிப்பு அல்ல. பாகிஸ்தான் தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாட்டிலும் கண்டிக்கிறது. இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
I strongly condemn the brutal victimisation of the Sri Lankan who has been killed. The incident is not a reflection of Pakistan. Pakistan denounces extremism in all its forms and manifestation. Those responsible shall be brought to justice.
— Pervez Khattak (@PervezKhattakPK) December 5, 2021