கானாவில் தனது மகனுடன் நிர்வாண புகைப்படம் எடுத்து வௌியிட்ட தாயாரின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டர்.
தனது மகனின் பிறந்தநாளில், மகனுடன் நிர்வாணமாக எடுத்த புகைப்படத்தை அவர் பகிர்ந்திரு;தார்.
தொழில் ரீதியாக அகுவாபெம் போலூ என்று அழைக்கப்படும் நடிகை ரோஸ்மண்ட் பிரவுனே சிறையில் அடைக்கப்பட்டார். தனது மகனின் ஏழாவது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில்ஈ அவர. நிர்வாணமாகவும், மகன் உள்ளாடையுடனும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, இந்த ஆண்டு ஏப்ரலில் மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.
அவர் குடும்ப வன்முறை மற்றும் ஆபாசமான விஷயங்களை இடுகையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.
உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ரூபி ஆர்யீட்டி, ஏற்கனவே வழங்கப்பட்ட தண்டனையை உறுதிசெய்தார்.
ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின்போது, நீதிபதி கிறிஸ்டியானா கேன் “கடுமையான தண்டனை மற்றவர்களுக்கு ஒரு தடையாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
நீதிபதி கேனின் தீர்ப்பில், “சமூக ஊடகங்களில் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவது நீதிமன்றத்தை தொந்தரவு செய்கிறது. இந்த போக்கால் கற்பழிப்பு, அசுத்தம், உடல் ரீதியான தாக்குதல்கள் தவிர, ஆபாசமான பொருட்களை வெளியிடுவது அதிகரித்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை’ என்றார்.
பிரவுனின் மகனை சக கானா நடிகை டிரேசி போக்கி கவனித்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது.