27 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

5 பிள்ளைகளை காட்டில் தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் தலைமறைவான பெண்!

வாரியபொல அம்பகடவர பிரதேசத்தில் தனது ஐந்து பிள்ளைகளையும் காட்டில் தவிக்கவிட்டுவிட்டு, கள்ளக்காதலனுடன் பெண்ணொருவர் ஓடிச் சென்றுள்ளார்.

காட்டில் ஓரிடத்திலிருந்து பிள்ளைகள் அழும் சத்தம் கேட்பதாக, பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து பொலிஸார் மேற்​கொண்ட தேடுதலின் போதே, அந்த ஐந்து பிள்ளைகளும் மீட்கப்பட்டனர்.

அந்த பிள்ளைகள் ஐவரும் கடந்த இரண்டு நாட்களாக எவ்விதமான உணவுமின்றி இருந்துள்ளனர். அந்த பிள்ளைகள் 2 வயது தொடக்கம்12 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

பிள்ளைகளின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர். அன்றையநாள் மதுபோதையில் வந்திருந்த கணவன், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். இதன்போதே, தன்னுடைய ஐந்து பிள்ளைகளையும் அழைத்துச் சென்ற 35 வயதான தாய், காட்டில் தவிக்க பிட்டுவிட்டு, முறையற்ற காதலுடன் தப்பியோடிவிட்டார்.

பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட பிள்ளைகள் ஐவரும் நன்னடத்தை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்படும் வரையிலும் அப்பிள்ளைகளின் பெரிய தாயாரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!

Pagetamil

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்த்தன காலமானார்

Pagetamil

ஜேவிபி ஆட்சியில் அரசியல் செல்வாக்கில் நடந்த கைது: முச்சக்கர வண்டி சாரதிகள் எதிர்ப்பு போராட்டம்!

Pagetamil

யாழில் ஒருவரை கட்டிவைத்து தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்

Pagetamil

சாவகச்சேரியில் ஜேவிபி எம்.பி பிடித்த பாரவூர்தி நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை!

Pagetamil

Leave a Comment