சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி பரிவர்த்தனைகள் தொடர்பான வழக்கை அர்ஜூன் மகேந்திரன் மற்றும் அஜன் கார்டிய புஞ்சிஹேவ ஆகிய இரு பிரதிவாதிகள் இன்றி தொடர்வதற்கு சட்டமா அதிபருக்கு முதலாவது நிரந்தர உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
சம்பா ஜானகி ராஜரத்ன, தமித் தொட்டாவத்த மற்றும் நாமல் பலல்ல ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரதிவாதிகள் இருவரும் தற்போது இலங்கையில் இல்லை என குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளன.
இந்த வழக்கு ஜூலை 7ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1