27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

வீதியை மறித்து சாரதிகள் சண்டித்தனம்: 30 நிமிடங்கள் காத்திருந்த பயணிகள்!

வவுனியா, மன்னார் வீதியில் பயணித்த தனியார் பேரூந்து ஒன்றும் கார் ஒன்றும் வீதியை மறித்து முரண்பட்டமையால் அவ் வீதியூடான போக்குவரத்து சுமார் அரை மணிநேரம் பாதிப்படைந்தது.

நேற்று (02) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து மன்னார் வீதி வழியாக சென்ற கார் ஒன்று வேப்பங்குளம் பகுதியில் வீதியின் பால திருத்த வேலை இடம்பெறும் நிலையில் ஒரு பகுதியில் செல்ல அனுமதிக்கப்பட்ட வீதி ஊடாக செல்ல முற்பட்ட போது, மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேரூந்தும் அவ் ஒரு வழி பதையின் ஊடாக செல்ல முற்பட்டது. இதனால் இரண்டு வாகனங்களும் செல்ல முடியாமையால் ஒருவரையொருவர் வாகனத்தை பின்நோக்கி செல்லுமாறு கூறினார். இருவரும் தத்தமது வாகனத்தை பின்நோக்கி எடுக்க மறுத்த நிலையில் இரு பகுதியினருக்கும் முரணப்பாடு ஏற்பட்டது.

முரண்பாட்டையடுத்து இருவரும் ஒரு வழி பாதையை வழிமறித்து தத்தமது வாகனத்தை நிறுத்தி வந்திருந்தமையால் அவ் வீதி ஊடாக போக்குவரத்துக்கள் சுமார் அரை மணிநேரம் பாதிப்படைந்திருந்தது. இதனையடுத்து அவ் வீதி வழியாக செல்ல முடியாமையால் மக்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தினர். போக்குவரத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து வாகனங்களை அகற்றியதுடன், போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

GovPay ஆரம்பம்

east tamil

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

Leave a Comment