Pagetamil
சினிமா

மாறி மாறி இதயங்களை பரிமாறிய சிம்பு- கீர்த்தி சுரேஷ்!

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை ரீமேக் செய்ய தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தை பல திரையுலக பிரபலங்கள் பாராட்டி வரும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பங்குக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

’மாநாடு’ திரைப்படம் சில விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ரசிகர்களின் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளது என்றும் இப்படி ஒரு அற்புதமான படத்தை கொடுத்த ’மாநாடு’ டீமுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கீர்த்தி சுரேஷின் இந்த டுவிட்டுக்கு பதிலளித்த சிம்பு, ஹார்ட் எமோஜியை பதிவு செய்து நன்றி என தெரிவிக்க, இதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ் தனது பங்காக ஹார்ட் எமோஜியை பதிவு செய்தார்.

சிம்பு, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் மாறி மாறி ஹார்ட் எமோஜியை பகிருந்து கொண்டதை பார்த்த நெட்டிசன்கள் சிம்பு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டு விட்டது என்று கொளுத்திப் போட்டதுடன், சிம்புவின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க வேண்டும் என்றும் சிம்பு – கீர்த்தி சுரேஷ் ஜோடியை திரையில் பார்க்க ஆர்வத்துடன் இருப்பதாகவும் கமெண்ட்டுகளை பதிவு செய்துவருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“குடும்பத்துடன் விரதம் இருக்கும் நயன்தாரா” – ‘மூக்குத்தி அம்மன் 2’ படவிழாவில் தயாரிப்பாளர் தகவல்

Pagetamil

காதல் முறிவு: விஜய் வர்மாவை பிரிந்தார் தமன்னா!

Pagetamil

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Pagetamil

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

Leave a Comment