27.5 C
Jaffna
December 25, 2024
Pagetamil
இலங்கை

கோட்டாவை பலவீனப்படுத்தும் சதி முயற்சியில் பெரமுன உறுப்பினர்கள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பலவீனப்படுத்தும் சதித்திட்டம் அரசாங்கத்திற்குள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இது தொடர்பில் ஜனாதிபதி தனது கவனத்தை செலுத்த வேண்டும் என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகுவதா இல்லையா என்பது தொடர்பில் நேற்று எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என தெரிவித்த அமைச்சர் அமரவீர, கட்சி தீர்மானிக்கும் எந்த நேரத்திலும் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து அரசாங்கத்தில் இருந்து விலகத் தயார் எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் மாறுபட்ட கருத்துக்கள் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர், தேவைப்படும் போது அவர்கள் தமது ஆட்சேபனைகளை முன்வைக்கின்றனர்.

எனினும் அவ்வாறான விடயங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த மாட்டோம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோரை கூட்டணியை விட்டு வெளியேறும்படி கூறிய குழுவே, சு.கவையும் வெளியேறும்படி கூறுகிறார்கள். சுமார் 30 பேரை அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு கோரப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் ஒரு குழு செயற்படுவது புலப்படுகிறது. இந்த குழு தொடர்பில் ஜனாதிபதி அவதானமாக செயற்பட வேண்டும். இது ஜனாதிபதிக்கு எதிரான சதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பெரிய குழு அரசாங்கத்தை விட்டு வெளியேறினால், அது தனிப் பெரும்பான்மையையும் இழக்க நேரிடும் என்று அமைச்சர் கூறினார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்பிக்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை விட்டு வெளியேறுவார்களா என வினவியபோது, ​​ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறினால் யார் வெளியேறுகிறார்கள் என்பதை அவர்களால் பார்க்க முடியும் என அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

துப்பாக்கியுடன் மாயமான திருகோணமலை கடற்படைச் சிப்பாய்!

Pagetamil

ரணில் அரசு இடைநிறுத்திய மின்சாரசபையின் 62 ஊழியர்களுக்கும் மீண்டும் பணி!

Pagetamil

யாழ், காரைநகர் இ.போ.ச சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் பெயரில் மோசடி

Pagetamil

Leave a Comment