Pagetamil
உலகம்

பிரேசிலிலும் ஒமைக்ரோன்!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரோன் வைரஸ் தொற்று பிரேசிலிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே பிரேசிலில் தான் முதன்முதலாக தொற்று உறுதியானது.

ஒமைக்ரோனால் தென்னாபிரிக்காவில் 300% அளவுக்கு கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஒரு வாரத்துக்குள் பொட்ஸ்வானா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இஸ்ரேல், இத்தாலி, செக் குடியரசு, ஹொங்கொங், அவுஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஒமைக்ரோன் வைரஸ் பரவியுள்ளது. ஒமைக்ரோன் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென்னாபிரிக்கா உடனான விமான சேவையை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன.

இந்நிலையில், லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலிலும் ஒமைக்ரோன் வைரஸ் பரவியுள்ளது. தென்னாபிரிக்காவில் இருந்து சாவ் பாவ்லோவுக்கு தனது மனைவியுடன் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கணவர், மனைவி இருவருக்குமே ஒமைக்ரோன் வகை வைரஸ் தாக்கியுள்ளது உறுதியானது. இதனையடுத்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

இதையும் படியுங்கள்

ஈரானுடான இராஜதந்திர முயற்சி தோல்வியடைந்தால் இராணுவம் பயன்படுத்தப்படும்!

Pagetamil

ஈரான்-அமெரிக்கா அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் அப்பாஸ் அரக்சி யார்?

Pagetamil

உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளின் உரிமையை ரஷ்யாவிற்கு விட்டுக்கொடுப்பதே போர் நிறுத்தத்திற்கு சிறந்த வழி!

Pagetamil

வரிப் போர்: ஹாலிவுட் படங்களை குறி வைக்கும் சீனா!

Pagetamil

சீனப் பொருட்கள் மீது 125% வரி விதித்த ட்ரம்ப்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!