தன் பெயருடன் தல என்பதை சேர்க்க வேண்டாம் என்று நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமாரை, ரசிகர்கள் ‘தல’ என்று அன்போடு அழைத்து வருவதுண்டு. சில ஊடகங்களும் கூட அவரது பெயருடன் ம் தல என்ற பெயரை உபயோகப்படுத்துகின்றன.
பொதுவாகவே அஜித் விளம்பரங்கள் மற்றும் மீடியா வெளிச்சத்திற்கு அப்பாற்பட்டு இருக்க விரும்புபவர். இந்நிலையில் தனது பெயருடன் தல என்ற பெயரையோ அல்லது வேறு பெயர்களை சேர்த்து உபயோகிக்க வேண்டாம் என்று ரசிகர்கள் மற்றும் ஊடங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
“பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
— Suresh Chandra (@SureshChandraa) December 1, 2021