26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

மன்னார் மாவட்டத்தில் 17,167 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக 2021 ஆம் 2022 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கையில் சுமார் 17,167 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை முழுமையாக அழிவடைந்துள்ள தாக மன்னார் மாவட்ட கமநல திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஏ.மெரின் குமார் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 5555 ஏக்கர், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 2400 ஏக்கர், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 4345 ஏக்கர் , மடு பிரதேச செயலாளர் பிரிவில் 825 ஏக்கர் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 4042 ஏக்கர் நெற் செய்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தற்போது வரை 17,167 ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

Leave a Comment