முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகியுள்ளார். தனது தீர்மானத்தை கட்சியின் தலைவர், செயலாளர், பிரதித் தலைவர் ஆகியோருக்கு ரணதுங்க கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது பொது நலனுக்கான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்ததாகக் கூறிய அவர், இந்த நோக்கத்திற்கான முதல் படியாக 2015 தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப் பெற்றதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு பலர் கட்சியை விட்டு வெளியேறிய போது, ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாப்பதற்காகவே தாம் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்ததாக அஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி பாரிய இழப்பை சந்தித்ததை சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதே தற்போதைய தேவை எனவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அத்தகைய தயாரிப்பு எதுவும் இல்லை என்று தோன்றுவதால், கட்சியில் நீடிப்பதில் எந்த பலனும் இல்லை, எனவே கட்சியில் இருந்து விலக முடிவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.