பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் அரசாங்கத்தின் தரப்பில் பாரிய பிரச்சினை காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புகள் தொடர்பான விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் விக்கிரமநாயக்க, சம்பவங்கள் தொடர்பில் முதலில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றார்.
பல்வேறு அறிக்கைகளை வெளியிடுவதனால் மாத்திரம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்படாமல் பொதுமக்களை திசை திருப்பும் வகையில் அறிக்கைகள் வெளியிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
எல்பி எரிவாயு சிலிண்டர்கள் சமூகத்தின் ஒரு அங்கமாகிவிட்டதால், இந்தப் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். சமீபத்திய நிகழ்வுகளால் க்கள் தற்போது அச்சமடைந்துள்ளனர் என்றார்.
அரசு பொறுப்பேற்று உரிய முடிவுகளை எடுக்க வேண்டும். உரம் தொடர்பாகவும் இதேபோன்றதொரு பிரச்சினை இடம்பெற்றதாக அவர் கூறினார்.
இவ்விடயம் தொடர்பில் தெளிவான அறிக்கையை வெளியிடுமாறும், நெருக்கடியை சமாளிக்குமாறும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.